என் கவிதைகள்

Tuesday, February 13, 2018

விரும்பியதும் -நீ
விலகியதும் -நீ 
தளும்பியதும் - நீ
தவறியதும் - நீ
தொடர்ந்தவளும் - நீ
எனைவிட்டு தொலைந்தவளும் -நீ
காதலும் - நீ
காயமும் -நீ
வேதமும் - நீ
என் வேதனையும் நீ...
மரமாகத்தானே நின்றேன்
கொடியாக ஏன் படர்ந்தாய்...
பறவயாகத்தானே பறந்திருந்தேன் -உன்
கூட்டுக்குள் ஏன் சிறைவைத்தாய்...
சிதிலமாய் சிதைந்து போனது -என்
காதல் மட்டுமில்லை
நானும்தான்....

No comments:

Post a Comment